1 0
Read Time:1 Minute, 38 Second

ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று‘ திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

மெல்போர்ன் நகரில் 2021ம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் ‘சூரரைப் போற்று’, ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ போன்ற படங்கள் பங்கேற்றது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றுள்ளது.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றின் குறிப்பிட்ட சில பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருந்தது. இந்த நிலையில், மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இரண்டு விருதுகளை இத்திரைப்படம் வென்றதையடுத்து ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %