கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியின் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான முருகன் – வளர்மதியின் மகன் முத்தமிழ் செல்வன். இவர் சிதம்பரம் முத்தையா தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ளார். மகனின் கல்லூரி படிப்பின் கல்வி கட்டணத்திற்கு உதவி செய்திட வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியனிடம் மாற்று திறனாளியான முருகன் கோரிக்கை மனு அளித்தார்.
இவரின் கோரிக்கையினை ஏற்று இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மாணவர் முத்தமிழ்செல்வனை அழைத்து அவரின் மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணமான ரூ.15 ஆயிரத்தினை முழுவதுமாக ஏற்று முதல் பருவத்திற்கான கல்வி கட்டனத்தினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளின் வாழ்வாதார வழி காட்டுதல் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகன், கணேஷ், ஆதிமூலம், ரெங்கசாமி, ரவி, நாகராஜ் மற்றும் மணமக்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.நிதி உதவி பெற்ற மாணவர் முத்தமிழ் செல்வன் மற்றும் அவரது பெற்றோர்கள் மாற்று திறனாளிகளின் சங்க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.