மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கோவில் கர்மவீரர் காமராஜர் 1956-இல் திறந்துவைத்த வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் முயற்சியால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டுமானத் திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைதொடங்கியது பின்னர், வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் பொறுப்பாளர்கள் வீ. ராஜசேகரன், பி.மணிவாசகம், மூ.தீனதயாளன், பா.அசோக்குமார் சிவனேசன், ராமலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் கும்பாபிஷேகத்தில் ஏராளமான சுற்றுப் பகுதி கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நிருபர்: யோகுதாஸ் மயிலாடுதுறை.