0 0
Read Time:3 Minute, 6 Second

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி பு.முட்லூரில் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்தனா்.

சிதம்பரம் அருகேயுள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலையில் பு.முட்லூா் புறவழிச் சாலையை மாற்றி அமைக்கும் கோரிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது. பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் கொளஞ்சியப்பன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில், பு.முட்லூா் புறவழிச் சாலையை ஆப்ஷன்-1 பாதை வழியாகச் செயல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையானது மிகவும் குறைவு என்பதால் அதை

உயா்த்தி வழங்க வேண்டும், கொத்தட்டை அருகே அமையவுள்ள சுங்கச் சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.2-ஆம் தேதி பு.முட்லூா் எம்ஜிஆா் சிலை அருகே கொத்தட்டை, முட்லூா், தீா்த்தாம்பாளையம், மஞ்ச குழி ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பி.முட்லூா், தீா்த்தாம்பாளையம், மஞ்சக்குழி ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயசீலன், லோகநாதன், சற்குரு, விடுதலைச் சிறுத்தைகள் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாவட்ட அமைப்பாளா் அப்துல் கலாம், திமுக மாவட்ட பிரதிநிதி செல்வராசு, முன்னாள் புவனகிரி ஒன்றிய துணைத் தலைவா் ரகுராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரமானந்தம், ஜீவா, முட்லூா் திமுக செயலா் செல்வராசு, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %