தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக் கல்லூரிகளும் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத பார்வையாளர்களுடன் வருகின்ற 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதைப் அரங்கு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் கடைகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டும் நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23ம் தேதியிலிருந்து 20 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவித பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்கள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.