0 0
Read Time:2 Minute, 2 Second

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா
தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமானது அங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையமானது தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 15 ஆயிரத்து 931 நபர்களும், 2-ஆம் தவணை தடுப்பூசி 35 ஆயிரத்து 387 நபர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 318 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை தேவைகேற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் எந்தவித தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.மகேந்திரன் ,மயிலாடுதுறைவட்டார மருத்துவ அலுவலர் மரு.சரத்சந்தர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %