0 0
Read Time:2 Minute, 49 Second

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி மோகனா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுமார் 11 மணி அளவில் தனது கோரிக்கையை நிறைவேற்ற கோரி மொட்டை மாடியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக போலீசார் துரிதமாக செயல்பட்டு மோகனாவை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்னுடைய கணவர் 2008-2009 இல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் உடல் தகுதி தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வந்தது. அதிலும் கலந்து கொண்டு உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இதன் பின்னர் கட்டாப் ரிசல்ட் விடும் பொழுது ரிசல்ட் வரவில்லை. இதனால் நல்ல முறையில் தேர்வு எழுதியும் ஏன் ரிசல்ட் வரவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே என் கணவர் அடுத்த கட்டமாக ஓஎம்ஆர் சீட் தாக்கல் கொடுக்கும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுவுக்கு மனு அனுப்பி இருந்தார். அதில் சரியான பதில்கள் கொடுக்கப்படவில்லை அதனால் என் கணவர் மீண்டும் ஆர்டிஐ மூலம் மனு போட்டு தகவல் ஆணையத்தில் விசாரணை நடந்தது. இதில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் ஜரீனா பேகம் கலந்து கொண்டனர்.

இதிலும் எனது கணவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் என் கணவர் அதிகமாக மன உளைச்சல் ஏற்பட்டு வருடக்கணக்கில் போராடி வருகிறார். என் கணவருக்காக நான் கேட்கிறேன். எனக்கு 2008-2009 க்கான தேர்வு பட்டியலை லிஸ்ட் எடுத்து வெரிபிகேஷன் செய்து பார்க்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட எனது கணவருக்கு பணி நியமன ஆணையை வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %