0 0
Read Time:9 Minute, 3 Second

அற்புத பயன்தரும் அகத்தி கீரை!. அகத்திக்கீரையின் நன்மைகள் மற்றும் மருத்துவக் குணங்கள்!

அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபி, டீ அதிகம் குடிப்பதனால் ஏற்படும் பித்தம் ஆகியவற்றை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.

அகத்தி பூக்கள் 3 எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி பருகலாம். இந்த தேனீரை வாரம் ஒருமுறை குடித்துவர பித்தம் குறைந்து வெப்பம் தணியும்.

அகத்திக்கீரை நன்மைகள் மருத்துவக் குணம் மிகுந்தது. அது நமக்குப் பல வகையில் நன்மை செய்கிறது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும், விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரைசமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்

எந்த ஊரிலும் கீரைக் கடைகளில் சுலபமாகக் கிடைக்கக்கூடியது அகத்திக் கீரை. அகத்திக்கீரைவருட முழுவதும் கிடைக்கும்.

அகத்தி அகத்திக் கீரை என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு மூலிகை, அகத்தி ஒரு சிறிய மர வகையைச் சேர்ந்ததாகும். இது சுமார் 10 அடிகள் முதல் 12 அடிகள் வரை நீண்டு வளரக் கூடியதாகும்.

எலும்பு பலம் பெற்று வளரவும், அதன் காரணமாக உடல் வளர்ச்சி பெறவும் சுண்ணாம்புச் சத்து நமது உடலுக்குத் தேவை. அடிக்கடி அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்தை அகத்திக் கீரையிலிருந்து பெறலாம்.

சிலர் விரதம் இருக்கும் நாளில் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். காரணம் அன்று அவர்கள் குறைந்த உணவை உட்கொள்வதால் ஏற்படும் குறைபாட்டை இந்தக் கீரையிலுள்ள சத்து நிறை வேற்றிவிடும்.

நமது ஆகாரத்துடன் நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கவில்லையானால், உண்ட ஆகாரம் சீக்கிரம் சீரணியாது மந்தப்படும்.

போதிய சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கவில்லை யானால் எலும்புகளின் பலம், வளர்ச்சிக் குறையும். வயதான காலத்தில் சிலருக்கு எலும்புகள் பலமற்று உடைந்து போவதுண்டு agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள்.

உடலை சுறுசுறுப்பாக்கும்

மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்பட்டு புத்தி மிந்தம், சோம்பல், அறிவு தடுமாற்றம், ஞாபகக் குறைவு உள்ளவர்கள் அடிக்கடி அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் இவைகள் பூரணமாகக் குணமாக்கும்.

அடிபட்டு இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தால் அகத்திக் கீரையை அரைத்துக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் இரத்தம் நின்று சீழ்பிடிக்காமல் விரைவில் காயம் குணமாகும்.

அகத்திக்கீரையில் உள்ள உயிர்ச்சத்துக்கள்

20 கிராம் அளவு அகத்திக்கீரையில்

2556 மில்லிகிராம் A வைட்டமின் உயிர்ச்சத்தும்,
230 மில்லிகிராம் அளவு சுண்ணாம்புச் சத்தும்,
101 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உண்டு.
இதனுடைய காலரி என்னும் உஷ்ண அளவு .

அகத்திக் கீரையில் புரதம், இரும்பு, சுண்ணாம்பு, உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன.

அகத்திக் கீரையை தூசி படியாமல் காய வைத்து சறுகு போல் நன்கு காய்ந்ததும் இலைகளைத் உருவி எடுத்து நன்றாக இடித்துத் தூளாக்கி சுத்தமான துணியில் சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் நீராகாரத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு கலக்கிச் சாப்பிட்டுவந்தால் குன்மநோய்கள் அகன்றுவிடும்.

புட்டாலம்மை என்னும் நோய்க்குக் கீழ்க்கண்டவாறு பயன் படுத்தினால் அந்நோய் அகன்றுவிடும்.

அகத்திக் கீரையின் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். மெல்லிய வெள்ளைத் துணியை எடுத்து இந்த சாறில் நனைத்து வீங்கியள்ள இடத்தில் துணியைப் பற்றுப் போடவேண்டும்.

ஈரம் உலர்ந்த துணியை எடுத்துவிட்டு மீண்டும் அகத்திக் கரையின் சாற்றில் நனைத்து பற்றுப் போடவேண்டும். இவ்வாறு நான்கு அல்லது ஐந்து முறைகள் பற்றுப் போட்டு பிறகு வெந்நீரால் அந்த இடத்தைத் துடைத்துவிட பெண்டும். இதுபோல் இரண்டு நாட்கள் செய்தால் புட்டாலம்மை நோய் குணமாகும் agathi keerai benefits in tamil அகத்திக்கீரை நன்மைகள்.
அகத்திக்கீரை தீமைகள்

அகத்திக்கீரை முற்றிவிட்டால் அது சற்று கடினத் தன்மையை அடைந்து விடும். முற்றின கீரையைச் சமையலுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. இளங் கீரையையே எடுக்க வேண்டும்.
சித்த மருந்து உபயோகிப்பவர்கள் அகத்திக்கீரையை சாப்பிட கூடாது.
அகத்திக்கீரையை அதிகம் சாப்பிட்டுவந்தால் தோல் அரிப்பு ஏற்படும்.
மது அருந்திவிட்டு அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது

அகத்தியில் கால்சியம் அதிகளவில் உள்ளது. வைட்டமின் சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்தி, வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், தோல் பிரச்னை, பித்தத்தால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை போக்குகிறது. காய்ச்சலை தணிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது.

அகத்தி வேரை பயன்படுத்தி உடல், கை கால் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர உள்ளங்கை, கால் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கண் எரிச்சல் குணமாகும். இதை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

அகத்தியானது உடல் வெப்பத்தை சமப்படுத்தும் உன்னதமான உணவு. வயிற்று கிருமிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. பித்த சமனியாக விளங்குகிறது. அகத்தி கீரையை பயன்படுத்தி இளநரையை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பங்கு கீரை பசை, 2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். சிறிது கிச்சிலி கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி கலவையை சேர்க்கவும். பின்னர், ஆற வைத்து வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். இதை வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு இருக்காது. இளநரை வராது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

அகத்தி கீரையை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் ஏற்படும். இதை அளவுக்கு அதிமாக பயன்படுத்த கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %