0
0
Read Time:55 Second
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியை பற்றி வார பத்திரிகை ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாகக் கூறி, சிதம்பரத்தில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் வடக்கு வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா்.
நகரத் தலைவா் பாலதண்டாயுதம், தில்லை ஆா்.மக்கீன், ஜெமினி எம்.என்.ராதா, ராஜா சம்பத்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.