0 0
Read Time:1 Minute, 51 Second

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தேனி நகரின் முக்கிய பகுதிகளான காமராஜர் பேருந்து நிலையம், பகவதி அம்மன் கோவில் தெரு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைகளில் மாஸ்க் அணியாமல் இருந்த சாலையோர வியாபாரிகளுக்கு முக கவசம் வழங்கி அணிய வலியுறுத்தினார்.

தேனி – மதுரை சாலையில் உள்ள மதுரையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல நகை கடைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பணியாளர்களில் சிலர் மாஸ்க் அணியாமல் இருந்தனர்.

இதனால் கோபமடைந்த ஆட்சியர் முரளிதரன் குறிப்பிட்ட அந்த நகைக் கடைக்கு அபராதம் விதிக்க நகராட்சி அதிகாரி அளிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் அறிவு செல்வம் கூறுகையில், தேனி நகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். 4 குழுக்கள் அமைத்து கொரோனா விதிமுறை மீறும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனிநபர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 6 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %