0 0
Read Time:3 Minute, 29 Second

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோயில்  30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மதுரை ஆதீனங்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டிய இடமாகும். மூன்று தலங்களில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்குமேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த ஆலயம் பைரவ க்ஷேத்திரம் ஆகும் கூறப்படுகிறது. சமயக் குரவர்களால் தேவாரம் பாடப் பெற்ற இந்த ஆலயத்தில் 1991ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீன இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் இன்று துவங்கின. இதனை முன்னிட்டு நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் துவங்கியது தொடர்ந்து இன்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தின் ஈசான தொடர்ந்து ஆலயத்தின் ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். விழாவில் மதுரை ஆதீனம் 293வது மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காறு பாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டை நாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் துவங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %