0
0
Read Time:1 Minute, 1 Second
வடலூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் ஏழைமுத்து மனைவி பூபதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர் வீட்டின் கதவு பூட்டை திறந்த போது, பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென பூபதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த ஒருவருடன் தப்பி சென்று விட்டார்.
பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.