0 0
Read Time:4 Minute, 24 Second

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளிடம் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது…. 2021-22 ஆண்டு குறுவை சாகுபடி செய்திட 98000 ஏக்கர் இலக்கு பெறப்பட்டு 97,827 ஏக்கர் சாதனை அடையப்பட்டுள்ளது. இதுவரை 15,450 ஏக்கர் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக இதுவரை 45.20 ஹெக்டெர் பரப்பளவில் நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தில் 44100 ஏக்கர் பரப்பிற்கு இரசாயண உரங்கள் விநியோகம் செய்திட செய்திட நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 44,554 ஏக்கர் பரப்பிற்கு 34,816 விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

அதில் 23,223 விவசாயிகளுக்கு 29,374 ஏக்கர் பரப்பிற்கு உரங்கள் 100 சத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.வேளாண்மைப்பொறியியல் துறை மூலம் நெல் நடவு இயந்திரம்,களை எடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி,நெல் அறுவடை இயந்திரம் இயந்திரம் ஆகியவரை மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தினை வேளாண்
பொறியியல் துறையில் பெற்றுக்கொள்ளலாம். 2021-22 ஆம் ஆம் நிதி ஆண்டில் தென்னை பயிர்களில் சொட்டுநீர் பாசனமும், இதர பயிர்களில் தெளிப்பு நீர் பாசனமும் மேற்கொள்ள 400 ஹெக்டேர் பொருள் இலக்கு பெறப்பட்டு ரூ.2.57 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்களை.

அணுகி உரிய ஆவணங்களை வழங்கி தங்களது பெயரை முன்கூட்டியே பதிவு
செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உழவன் கைப்பேசி செயலி மூலம் வேளாண்மைத்துறை மானியத் திட்டங்கள்,
பயனாளிகள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரம் மற்றும் விதை இருப்பு
விபரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் விபரம், விளை பொருட்கள்
சந்தை விலை நிலவரம் ஆகிய தகவல்கைள உடனுக்குடன் அறிந்து கொண்டு
பயன்பெற முடியும். இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 21,266 விவசாயிகள்
இச்செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அனைத்து விவசாயிகளும் உழவன்
கைப்பேசி செயலியினை தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து
பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க
மையங்களுக்கு நேரில் தங்களது கைப்பேசியினை கொண்டு சென்று பதிவிறக்கம்
செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர்
இரா.லலிதா இ.ஆ.ப,,அவர்கள் தெரிவித்தார்.

என இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.முருகதாஸ், வேளாண்மை
துறை துணை இயக்குநர் திரு.மதியரசன், வேளாண்மை பொறியியல்துறை
செயற்பொறியாளர் திரு.பன்னீர்செல்வம், உதவி இயக்குநர் (வேளாண்மை)
திரு.சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %