கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை அம்மன் நகரில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியை தொடங்கியது அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர் அப்பகுதியில் உள்ள மக்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அதைத்தொடர்ந்து சார் ஆட்சியர் மதுபாலன் இடம் மனு அளித்தனர் அதில் பள்ளிப்படை ஊராட்சி தில்லையம்மன் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள் மேலும் அங்கு உள்ள பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றார்கள் இந்தநிலையில் அந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே சார் ஆட்சியர் தலையிட்டு செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளிப்படை சண்முகம் கொத்தங்குடி அம்சா வேணுகோபால் முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன் ஆனந்த் நடராஜன் பாண்டியன் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.