0 0
Read Time:2 Minute, 52 Second

சுடுகாட்டில் மஹாபூஜை செய்து, விநோத வழிபாடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சுடுகாட்டில் விநோத வழிபாடு நடைபெற்றது. சத்குரு சித்தர் சுவாமிகளின் 58-வது ஆண்டு சித்தி தினத்தை முன்னிட்டு, சுவாமி ஓங்காரநந்தா என்பவர், தனது சீடர்களுடன் சுடுகாட்டில் சிறப்பு பூஜை மேற்கொண்டார்.

சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்பு பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதனையடுத்து, 58-கிலோ அரிசி கொண்டு சாதம் படைக்கப்பட்டு, ஒரே இடத்தில் குவியலாக வைத்து, அதில், சாம்பார், மோர், ரசம், அப்பளம், வடை, பாயசம், பழங்கள், இனிப்புப்பொருட்கள் கொண்டு மஹாபடையல் செய்து மஹா படையலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா நீங்க வேண்டி சிவாய மந்திரத்தை 108 முறை கூறி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு படையல் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் அங்கேயே விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை சுடுகாட்டிலேயே உண்டனர்.

இது குறித்து சுவாமி ஓங்காரநந்தா கூறும்போது, சுடுகாடு என்பது புனிதமான இடமாகும். இங்கு கண்ணுக்குத்தெரியாத சூட்சும ரூபத்தில், லட்சக்கணக்கான ஆன்மாக்கள் வசிக்கின்றன. அவர்கள் அமைதி அடைய வேண்டும். அவர்கள் அமைதி அடைந்தால், இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் ஏற்படாது என்று கூறினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %