விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கோரிக்கை!.
மேற்படி கொங்கரப்பட்டு கிராம அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் சென்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுக்கப்பட்டது. கொங்கரப்பட்டு கிராம அரசு உயர்நிலைப்பள்ளி கழிவறை வசதி முழுமையாக செயல்படவும், குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் கேட்டும், மேல்நிலை வகுப்பு பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு உயர்நிலைப் பள்ளியை தொடர்ந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று மாணவிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர். உடன் விழுப்புரம் மாவட்டம் பத்து ரூபாய் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் K. அசோக்குமார் MA.BL , விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ப.சின்னராஜி, கொங்கரப்பட்டு தன்னார்வலர்கள் ஜனார்த்தனன் , பாலமுருகன் மற்றும் செல்வம் உடன் சென்று கொங்கரப்பட்டு அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கப்பட்டது.
மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி: மணி