0 0
Read Time:3 Minute, 9 Second

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக, கர்நாடக எல்லைகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு!.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், கேரள மாநிலத்தில் மட்டும் நோய்த் தொற்று குறைந்தபாடில்லை. கொரோனா முதல் அலையை சரியாக கையாண்ட கேரள மாநில அரசு, இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பில், கேரள மாநிலத்தில் இருந்து தான் 60 சதவீத பாதிப்புகள் பதிவாகின்றன. கேரள மாநிலத்தில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு அதிகமாகவே உள்ளது. இதை அடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, கொரோனா நிலவரம் தொடர்பாக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, கேரள மாநிலத்தின் எல்லைகளான தமிழகம், கர்நாடகா ஆகிய எல்லைகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். எல்லைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
கேரள மாநிலத்தின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கேரள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தினசரி கொரோனா 30 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவாகி உள்ளது. இன்று மேலும், 32 ஆயிரத்து 803 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 ஆயிரத்து 610 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 173 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %