கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று அந்த அழகுநிலையத்திற்கு சென்று, அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அந்த அழகு நிலையத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அரை, குறை ஆடைகளுடன் இருந்தனர். பக்கத்து அறையை சோதனை செய்த போது, அங்கும் 2 பெண்கள் அரை, குறை ஆடைகளுடன் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் புதுப்பாளையத்தை சேர்ந்த 26 வயது என்ஜினீயர் என்றும், அவர் ஒரு பெண்ணுடன் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.தொடர்ந்து விசாரித்த போது, வண்ணாரப்பாளையம் பாண்டியன் மனைவி புவனேஸ்வரி, குமார் மகன் மணிமாறன், திருப்பாதிரிப்புலியூர் ராஜீ என்கிற ராஜ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அழகு நிலையம் என்ற பெயரில் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், பெரியப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது பெண், சிதம்பரம் வல்லம்படுகை பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஆகிய 3 பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரிய வந்தது.இதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபசாரத்தில் ஈடுபட்ட என்ஜினீயரை கைது செய்தனர். விபசார தொழிலில் ஈடுபட்ட 3 அழகிகளை போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.3 பேருக்கு வலைவீச்சுமேலும் அழகு நிலையம் நடத்தி வந்த புவனேஸ்வரி, மணிமாறன், ராஜீ என்கிற ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அழகு நிலையம் என்ற பெயரில் விபசார தொழில் நடத்தி வந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read Time:2 Minute, 39 Second