0 0
Read Time:16 Minute, 7 Second

பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களும் பனங்கற்கண்டு தரும் நன்மைகளும்!

பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

பனங்கற்கண்டு என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் சிறந்தது.

சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படும்.

வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைக்கும்.

ஜலதோஷ பாதிப்பால் சிலருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது.

இப்பிரச்சனையை போக்க 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகும்.

மூளையின் செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நபர்களுக்கு ஞாபகத்திறன் அதிகம் இருக்கிறது.

ஞாபத்திறன் மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும், கண்பார்வை திறனும் மேம்படும்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.

இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர். இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

பனங்கற்கண்டை சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

சோர்வாக இருந்தால் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படும்போது 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

சளி

பனைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பனங்கற்கண்டு குளிர்காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெறும் பங்காற்றுகிறது.
சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்கினால் சளி போன்ற தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
வாய் துர்நாற்றம்

அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயைத் தண்ணீருடன் கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை ஏற்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம்.

உங்கள் வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கச் சிறிது சீரகம், பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
தொண்டைக்கட்டு

ஜலதோஷ பாதிப்பால் தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டைக் கட்டு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சரியாகப் பேச முடியாமலும் சாப்பிட முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றன.

இந்தபிரச்சனையைப்போக்க அரை தேக்கரண்டி மிளகு தூள், அரை தேக்கரண்டி நெய் மற்றும் அரை தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டைக் கட்டு சீக்கிரம் குணமாகும்.
உடல் சத்து

தினந்தோறும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும்.

உங்களின் உடல் சோர்வு நீங்கவும் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் அரை தேக்கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகளை நீங்கத் திரும்பப் பெறுவதுடன் உடல் மற்றும் மனதின் சுருசுருப்பை அதிகரிக்கிறது.

பனை சர்க்கரை நீரிழப்புக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் உடலின் உயிரணுக்களுக்குள் உப்பு சத்தை சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.

நியாபாக சக்தி

மூளையின் உயிரணுக்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்களுக்கு நியாபாகத் திறன் அதிகம் இருக்கின்றது.

நியாபாகத் திறனை மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதம் பருப்பு மற்றும் சீரகம் இவற்றைச் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் கண் பார்வை திறன் மேம்படும்.
நோய் எதிர்ப்புச் சக்தி

எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று உடல் நலத்தை பாதுகாப்பதில் உடலில் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்கவேண்டியது அவசியம்.

உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டுடன் சேர்த்து பாதம், மிளகு தூள் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

சிறுநீரக கல்

சுண்ணாம்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இந்த பிரச்சனையைத் தீர்க்க இரண்டு தேக்கரண்டி வெங்காயச் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் சுலபத்தில் கரையும் மற்றும் சிறுநீரக மேம்படும் அதிகரிக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பமாக இருக்க கூடிய பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் காலம் வரை ஒரு சில உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பனங்கற்கண்டுகளைக் கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப்புண் முதலியவை குணமாகின்றன. இரத்த அழுத்தத்தையும் சீராகுகிறது.

உடல் சூடு

கோடைக்காலங்களில் வளரும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர்ச் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு எனப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த காலங்களில் பனங்கற்கண்டு அதிகம் சாப்பிடுவதாலும் பானங்களில் பனங்கற்கண்டுகளைக் கலந்து அருந்துவதாலும் உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகள் அனைத்தையும் நீக்கமுடியும்.
நரம்பு பிரச்சனைகள்

பனங்கற்கண்டில் பச்சைக் காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்களை காட்டிலும் சாம்பல் சத்து அதிக அளவில் உள்ளது.

தசைச் சுருக்கம் மற்றும் வழக்கமான இதயத்துடிப்பு போன்ற நல்ல நரம்பு மண்டல செயல்பாட்டைப் பராமரிக்கச் சாம்பல் சத்து அவசியம்.

எலும்பு பிரச்சினைகள்

எலும்பு பிரச்சினைகள் அணைத்து வயதினருக்கும் மிகவும் பொதுவான பிரச்சினை. எலும்பு சிதைவு மற்றும் முழங்கால் வலி போன்ற பிரச்சினைகள் இந்த விஷயத்தில், பனங்கற்கண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பனை மிட்டாயில் சுண்ணாம்பு மற்றும் சாம்பல் சத்து நிறைந்துள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

இரத்த சோகை

இரத்த சோகை பிரச்சினைகள் உள்ளவர்களுக்குப் பனங்கற்கண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் பனங்கற்கண்டில் நிறைய இரும்புச்சத்து உள்ளது.

பனங்கற்கண்டு குறிப்பாகப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் ஆரோக்கியமான இரத்தம் வைத்திருக்க உதவுகிறது.
நீரழிவு நோய்

பனங்கற்கண்டு சர்க்கரை அளவு மிகவும் குறைவு.இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது.

இது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது குடும்பத்தின் இரத்த சொந்தங்களில் நீரிழிவு நோய்கொண்டவர்களுக்கு, வெள்ளை சர்க்கரைக்குப் பனங்கற்கண்டுஒரு நல்ல மாற்றாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %