மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் முதல்வருக்கு கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வழியாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எதிராக, மத்திய அரசு இயற்றியுள்ளதாக மத்திய தொழிலாளர் தொகுப்பு சட்டத்தை எதிர்த்து,தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம் 1982 ன் கீழ் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நலவாரியங்கள் லெவி முறை ஆகியவற்றை பாதுகாத்து அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்களை உறுதி செய்திடும் வகையில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை புறக்கணித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்க்கு அனுப்பி வைப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதனிடம் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹலிக்குல் ஜமால் மனு கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏ.ஐ.யூ டபிள்யூ சி நகர தலைவர் அருள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம், மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் நகர துணைத் தலைவர் அசோக் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி: ஹலிக்குல் ஜமால்