0 0
Read Time:9 Minute, 37 Second

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நெல்லிக்காய் !! .

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும்; வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றன. வீட்டுத் தோட்டங்களில், தோப்புகளில் விளையும் மரங்கள் பெரிய கனிகளுடன் காணப்படும். நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லி மரங்கள், வீட்டு மராமத்து வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் தயாரிப்பதில் பயன்படுகின்றன.நெல்லி கட்டைகள், நீரால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. நெல்லிக்காய் இலைகள், ஏலக்காய் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. இவை மண்ணில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன. நெல்லிக்காய் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி., எலுமிச்சம்பழ சாறு 15 மி.லி. ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர மதுமேகம் குணமாகும்.

நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.

குறிப்பாக நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது.

இவ்வளவு மருத்து பண்புகளை தன்னுள் கொண்ட மலை நெல்லிக்காயை ஒருவர் தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இந்த நெல்லிக்காயை பல வடிவங்களிலும் அன்றாடம் எடுக்கலாம். அதில் அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.

மலை நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்குவிக்கும். இயற்கையாகவே இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவில் உள்ள பிரச்சனைகளைத் தடுத்து சரியான அளவில் பராமரிக்கும்.

மலை நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மலை நெல்லிக்காய் சாறு நரம்பு மற்றும் மூளைக்கு மிகச்சிறந்த டானிக். இதனை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும்.

நெல்லிக்காய் நன்மைகள் இளமை தோற்றம் நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.

இதயம் உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கிறது.

சிறுநீரகம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றிற்க்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் நெல்லியை அதிகம் உண்ண சிறுநீர் நன்கு பிரியும்.

கண்கள் நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ஏ சத்து நமது கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %