0 0
Read Time:4 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் 61 வயதான ராமச்சந்திரன். இவரது மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளியான  இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி  உதவி தொகை கோரி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் விண்ணப்பித்து இருந்தார். அதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு  போலீசாரிடம் ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார். புகாரை பெற்று கொண்ட நாகை லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு சித்திர வேலு தலைமையில் லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்மொழி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் வந்தனர். அப்போது ராமச்சந்திரனிடம் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய்  2 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி ரகசியமாக கண்காணித்தனர்.

அதனைத் தொடர்ந்து பணத்தை பெற்று கொண்ட தனி தாசில்தார் பாலமுருகனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக  பிடித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்ல உடல்நிலை உள்ளவர்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்கான வாழ்வாதாரத்திற்கு வருவாயினை உருவாக்கி கொள்கின்றனர். ஆனால்  உடலளவில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வருவாய் என தேட முடியாத சூழலில் அரசு அவர்களுக்கு உதவித்தொகையினை வழங்கி வருகிறது. அந்த உதவி தொகையினை பெறுவதற்கு அரசு வழிவகை செய்தாலும் அதனைப் பெறுவதற்கு அதிகாரிகள் பெறும் முட்டுக்கட்டைகளாக இருந்து வருகின்றனர்.  

அவர்களின் நிலையை சற்றும் மனதில் கொள்ளாமல்  அவர்களிடம் லஞ்சம் கேட்டு அவர்களை அலைக்கழிப்பதும், இடம் லஞ்சம் பெற்று உதவித்தொகை வழங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. பலரும் இதுதொடர்பாக அவர் அளிக்க தயங்கி தங்களுக்கு காரியம் நடந்தால் போதும் என லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு அவர்கள் கேட்கும் நிறைஞ்ச தொகையை கொடுத்து விடுகின்றனர். இதற்கு அப்பாற்பட்டு ஒரு சிலர் மட்டும் லஞ்சம் கொடுக்க மனமின்றி, இதுகுறித்த புகாரினை லஞ்ச ஒழிப்புத் துறை யினருக்கு தகவல் அளிக்கின்றனர். இனிவரும் காலங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து அனைவரும் புகார் தெரிவித்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வினை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %