0 0
Read Time:8 Minute, 7 Second

சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றும் முசுமுசுக்கை மூலிகை !!. முசுமுசுக்கை கீரையின் மருத்துவ பயன்கள் !.

முசுமுசுக்கை கீரை நன்மைகள்
முசுமுசுக்கை கீரை கொடி வகையைச் சேர்ந்த ஒரு கீரையாகும். முசுமுசுக்கையானது கொம்புபுடலை, பேய்புடலை, மொசுமொசுக்கை, மாமுலி, ஆயிலேயம் எனவும் அழைக்கபடுகிறது. இலையும், தண்டுகளும் சற்று சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளை சுற்றி சுனைகள் (மயிரிழை) காணப்படும். இது செடி, மரம், சுவர்களில் பற்றி வளரும் இயல்புடையது. முசுமுசுக்கை கீரையானது துவர்ப்பு, மற்றும் கார்ப்புச் சுவையுடனும், வெப்பத் தன்மையும் கொண்டது. முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டவை.

முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது. முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
முசுமுசுக்கை கீரையின் மருத்துவ பயன்கள்

  1. முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும்
  2. முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  3. முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும்.
  4. காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.
  5. கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழ்கினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  6. முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும், காச நோயை குணபடுத்தும்.
  7. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
  8. முசுமுசுக்கை வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பை நோய்கள் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
  9. முசுமுசுக்கையானது நுரையீரல், சுவாசக் கோளாறு, சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும்.
  10. முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமடையும்.
  11. முசுமுசுக்கை தைலம் உடல் சூட்டை தணிக்கும். கண் எரிச்சல் போக்கும்.
  12. முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து நெய்யில் வதக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
  13. முசுமுசுக்கை சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி காலை மாலை இரு சிட்டிகை உண்டால் இருமல் குணமாகும்.
  14. முசுமுசுக்கை கீரையுடன் வெந்தயம் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும்.
  15. 10 மி.லி முசுமுசுக்கை சாறு 10 மி.லி நெல்லிச்சாறு இரண்டும் கலந்து குடித்தால் பித்தம் தணியும்.

சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.

முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும். முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும். பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %