JUSTIN | நீட் தேர்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது; 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெறும்!
இந்நிலையில்,
“மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்; நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில்,
““மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்; நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்துகொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ – மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் கூட ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை. மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம்; சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத் தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது, நீட் தேர்வை ஒன்றிய அரசை ஒன்றிய அரசு நீக்கும் வரை சட்ட ரீதியான போராட்டம் தொடரும்.
நீட்டை இந்திய துணை கண்டத்தின் பிரச்னையாகக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று முதலமைச்சர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்