மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பழம், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டசத்து உணவின் அவசியம் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததையும், கோலங்கள் வரையப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகளில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களால் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவு கண்காட்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் போஷன் அபியான் திட்டம் குறித்து உறுதிமொழி எடூத்துக்கொண்டனர். நிறைவாக மாவட்ட ஆட்சியர் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது…
தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஊட்டச்சத்து மாத விழாவில் போஷன் அபியான் திட்டம் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போஷன் அபியான் திட்டம் என்பது மத்திய மற்றும் மாநிலஅரசால் இணைந்து செயல்படூத்தப்படூம் திட்டம் ஆகும்.
இத்திட்டமானது மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான திட்டமாகும். இதில் குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, குள்ளத்தன்மை 1 2 எடைக்குறைவு , இரத்தசோகை இவற்றை குறைக்க மற்றும் தாய்ப்பால் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு 2 கர்ப்பிணி பெண்கள், வருகிறது. இம்மையங்கள் மூலம் 3933 5733 தாய்மார்கள், ஆயிரத்து பாலுட்டும் குழந்தைகள் 295 43 (ஆறு வயதிற்குட்பட்ட) ஆகியோர் பயன்பெற்று வருகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடு இல்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் வழங்கும் விழிப்புணர்வை முழுமையாக பெற்று வேண்டும் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கிய வாழ்வை வாழ என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், வளர்ச்சி குழந்தைகள் அலுவலர் ஒருங்கிணைந்த (பொறுப்பு) திட்ட அலுவலர் பழனி,வட்டார அலுவலர்கள் திட்ட குழந்தைகள் வளர்ச்சி சாந்தி, சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.