மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றிய தலைவர் சண்முகவள்ளி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
100 நாள் வேலையை இரண்டு நாளாக உயர்த்திட 100 நாள் வேலைக்கு தினக்கூலியாக ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கிட, வேளையில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவது கைவிட, நகராட்சி பேரூராட்சி பகுதிக்கு விரிவுபடுத்த, கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ 7,500 வழங்கிட, நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை தடுத்து நினைத்திட வேண்டும் என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி மாவட்ட செயலாளர் வெண்ணிலா தரங்கை ஒன்றிய செயலாளர் ராணி செம்பை ஒன்றிய செயலாளர் கண்ணகி ஒன்றிய தலைவர் துர்கா தேவி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.