கடலூர் மாவட்டத்தில், கடலூர் – திருக்கோயிலூர் -சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில்
நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் திருக்கோயிலூர் மாநில நெடுஞ்சாலையில் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில்
சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று
வருவதை பார்வையிட்டு, துரிதமாக பணிகளை மேற்கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க
நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கடலூர் திருக்கோயிலூர் மாநில நெடுஞ்சாலையில், பண்ருட்டி பண்ணை குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள சிறுபாலத்தில் மழைநீர் வடிய ஏதுவாக தூர் வாரும் பணி நடைபெற்றுள்ளதையும், தொடர்ந்து திருவதிகை அணைக்கட்டு பகுதியில் ரூ.116/- இலட்சம் மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலையினை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு, மேற்கொள்ளும் விரிவாக்கப்பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து தரமாக அமைப்பதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது (மாநில நெடுஞ்சாலை துறை) கோட்டப்பொறியாளர் பரந்தாமன்,
கடலூர்,உதவிகோட்டப்பொறியளர்(மா.நெ.து) வீரப்பன், குறிஞ்சிப்பாடி உதவிகோட்டப்பொறியளர்
(மா.நெ.து) சந்தோஷ்குமார் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.