0 0
Read Time:2 Minute, 26 Second

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் மாளிகையில் மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா செல்வி தலைமையில் சரத்சந்திரன் நவாஸ் ரங்கநாதன் முத்து சுவாமிநாதன் காளிதாஸ் ராம்குமார் வட வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமானுஜம் வரவேற்பு ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமாரர் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்பழகன் குத்தால காங்கிரஸ் தலைவர் சூரியா அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஹலிக்குல் ஜமால் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அது சமயம் மயிலாடுதுறை நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அந்தோணிசாமி. எஸ் எஸ்.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தலைவர் எஸ்.ராஜ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %