0 0
Read Time:3 Minute, 20 Second

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் அதுமட்டுமின்றி எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இடம் ஆகும். ஆனால் இந்த கொரோனா காலகட்டம் தொடங்கிய முதல் இங்கு பெரிதும் திருமணங்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திருமணத்திற்கென வேண்டிக்கொண்டவர்கள் மற்றும் முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மட்டும் இங்கே திருமணம் செய்துகொண்டு வந்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை: கோயில்கள் மூடப்பட்டதால் வெளியிலேயே மொட்டை போட்ட பக்தர்கள்

இந்தநிலையில் தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் அச்சம் உள்ளதால் தமிழக அரசே வாரம் மூன்று நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . ஆனால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் திருமணம் செய்வதற்கு இங்கு திருமணங்கள் கோயில் வாசலிலேயே நடப்பதால் இங்கு ஒரே நேரத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டும் சூழல் நிலவியது.

புரட்டாசி சனிக்கிழமை: கோயில்கள் மூடப்பட்டதால் வெளியிலேயே மொட்டை போட்ட பக்தர்கள்

இந்நிலையில் நேற்று முதல் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று திருவந்திபுரம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரசனத்திர்க்காக பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர், ஆனால் இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கோயிலின் வாசலிலேயே தடுப்புகள் போட்டு மறுக்கப்பட்டு அங்கேயே நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

புரட்டாசி சனிக்கிழமை: கோயில்கள் மூடப்பட்டதால் வெளியிலேயே மொட்டை போட்ட பக்தர்கள்

மேலும் கோயிலுக்கு மொட்டை போட வந்தவர்களும், கோயிலில் அனுமதி இல்லாததால் கோயிலுக்கு வெளியே உள்ள சாலையின் அருகிலேயே அமர்ந்து மொட்டை அடித்துக்குகொண்டு கோயிலுக்கு சென்றனர், மேலும் கோவிலுக்கு வெளியிலேயே பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்தனர். இருந்தாலும் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் இன்றாவது கோயில் திறக்கப்படும் என்று நினைத்து வந்த பக்தர்கள் இன்றும் கோயில் திறக்கப்படாததால் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல், வாசலிலேயே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %