சென்னை-‘தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கன மழை, மிக கன மழை பெய்யும்.பிற மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.நாளை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 21ம் தேதி, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.மறுநாள் 22ம் தேதி, சேலம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை, 36; குறைந்தபட்ச வெப்பநிலை, 26 டிகிரி செல்ஷியசை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில், 12 செ.மீ; தொண்டியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.