வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
வெண்பூசணி (Ash gourd in Tamil) என்றால் என்ன?
பெனின்கசா ஹிஸ்பிடா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெண்பூசணிக் காய் (Ash gourd vegetable in tamil), பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவில் உண்ணப்படும் ஒரு தனித்துவமான பூசணிக்காய் வகை. இது பெரும்பாலும் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஆசிய சமையலில் சூப்களில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய யோகிகள் நீண்ட காலமாக வெள்ளைப் பூசணியை மிகவும் இயற்கையான உத்வேகம் தரும் உணவுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். ஏனெனில், யோக விஞ்ஞானத்தில் “ப்ராணா” அல்லது பிரதான உயிர்சக்தி என்று குறிப்பிடுவதை வெண்பூசணி அதிக அளவில் கொண்டுள்ளது.
வெண்பூசணி பல்வேறு பொதுவான மற்றும் பிராந்திய பெயர்களால் அறியப்படுகிறது [1]:
வெள்ளைப் பூசணி
விண்ட்டர் மெலன்
வேக்ஸ் கார்ட் (denotes one sub-type of ash gourd)
குஷ்மண்டா, ப்ரிஹட்பலா, க்ரினவஸா, கிரம்யகர்கட்டி, கர்க்காரு (சமஸ்கிருதம்)
பேத்தா, பேத்தக்கடு (ஹிந்தி)
டோரோபோட் (மணிப்பூரி)
கோஹ்லா (மராத்தி)
நீர் பூசணிக்காய் (தமிழ்)
கும்பளங்கா (மலையாளம்)
பூடிடா கும்மடிக்காயா (தெலுங்கு)
பூடெகும்பலக்காயி, பூடு கும்பலா (கன்னடம்)
கும்ரா, சல்கும்ரா (பெங்காலி)
கோம்ரா (அசாமிசி)
பயன்கள்:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி ஜுஸ் உதவும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு மிகவும் நல்லது.
வெண்பூசணி பற்றிய அறிவியல் ஆய்வுகள் கூடுதல் ஆரோக்கிய பலன்களை [1] எடுத்துரைக்கின்றன.
பட்டியல்
2001ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறு எலிகளில் பரிசோதிக்கப்படும்போது, அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணின் வீரியத்தைத் தடுக்கின்றன. மேலும், இந்த சாறுகள் நஞ்சு இல்லாதவை என்றும் கண்டறியப்பட்டது.
2005ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளைப் பூசணிக்காய் விதையின் சாறுகள் ஆண்ட்டி ஆஞ்சியோஜெனிக் எனப்படும் இரத்தக்குழாய் கட்டிகளை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. எளிமையாகச் சொன்னால், புற்றுநோய் கட்டிகளுக்கு இரத்தத்தை வழங்குவதை இது தடுக்கிறது.
2000ல் ஃபிட்டோடெராபியாவில் வெளியிடப்பட்ட பூர்வாங்க ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறு எலிகளில் மார்பைன் மருந்து உட்கொள்வதை நிறுத்துவதால் ஏற்படும் அறிகுறிகளை கணிசமாக குறைக்கிறது. இதனால், ஓபியாய்டு போதை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை இந்த சாறு கொண்டுள்ளது.
ஜியாங்சு ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சர் சயின்ஸ் இதழில் 1995ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிறுநீரக பாதிப்பு உள்ள எலிகளில் சோதிக்கப்படும் போது, வெள்ளைப் பூசணியிலுள்ள மூலப்பொருட்கள் சிறுநீரக பாதுகாப்புக்கான பலன்களை விளக்குகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈரானிய ஜர்னல் ஆஃப் பார்மகாலஜி அண்ட் தெரபியூட்டிக்ஸில் 2005ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, வயிற்றுப்போக்கு எதிர்ப்பு ஏஜெண்ட்டாக வெள்ளைப் பூசணி பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மகாலஜியில் 2010ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணிக்காய் விதைகளின் மெத்தனாலிக் சாறுகள் அலர்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணத்தில் வலிமையாக செயல்படுவதைக் காட்டின.
தி கொரியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் 2003ம் வருட ஆய்வில், நீரிழிவு எதிர்ப்பு ஏஜெண்ட்டாக வெள்ளைப் பூசணி பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியது: எலிகளில் பரிசோதிக்கப்படும்போது, இந்த காயின் பொடி குளுக்கோஸ், இன்சுலின், கொலஸ்ட்ரால், கொழுப்பு அமிலம் மற்றும் எச்.டி.எல்-கொழுப்பின் அளவுகளில் சரியான விளைவுகளை உண்டாக்கியது.
2003ம் ஆண்டு இந்தியன் ஜர்னல் ஆஃப் ஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறுகள் எலிகளில் மன அழுத்த எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.