மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள விதவை பெண்களின் குடும்பங்கள் வாழ்வாதர மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கில் பாத்திமா சாரிடபுள் சொசைட்டி, ஹோப் எவர் பவுண்டேசன் சாரிடபுள் அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய அரசின் ஆடு வளர்ப்பு திட்டத்தில் 40 விதவைகளுக்கு தலா இரண்டு ஆடுகளும், வளர்ப்புக்கான செலவின தொகையாக தலா ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி ஹோப் எவர் பவுண்டேசன் அறக்கட்டளையின் இயக்குநர் ரோசலின் கயல்விழி தலைமையில் தூய ஜான் துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு அருட்சகோதரி. மரியா முன்னிலை வகித்தார். புனித தெரசா கன்னியர் இல்ல தலைவி செபஸ்டினா பிரான்சிஸ் மற்றும் அருட்சகோதரிகள் நோயல் ஜெனட், ரொமேனா, ஆர்.சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியையும், களப்பணியாளருமான வெரோணிக்கா,சமூக நலப்பணி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி தார்சில் மேரி மற்றும் ஆசிரியர்கள், பயனாளிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆடுகளை வழங்கினர்.
இத்திட்டத்தால் தரங்கம்பாடி, காழியப்பநல்லூர், துடரிப்பேட்டை, சிங்கானோடை, அனந்தமங்கலம், காட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விதவை பெண்கள் பயனடைந்தனர். முன்னதாக சமூகத்தில் விதவை பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதை எப்படி எதிர்கொள்வது, வாழ்வாதாரத்தை உருவாக்கி அதை எப்படி பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உரை நிகழ்த்தினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.