0 0
Read Time:2 Minute, 54 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கிராமத்தின ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கடையை மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு வழக்கம்போல் பூட்டிச்சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு அறுக்கப்பட்டு கிடந்தது.

மேலும், பதட்டமடைந்த மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் கடையின் பின்புறம் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்புறம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவர் துளையிடப்பட்டிருந்ததும், சிசிடிவி உடைக்கப்பட்டிருந்ததும், கடையின் மேலும் சில பூட்டுக்களை திறக்க முடியாததால் சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த பெரம்பூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜா சம்பவ இடத்துக்கு வந்து, கொள்ளை முயற்சி குறித்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயை வரவழைக்க உத்தரவிட்டார். இக்கடையில் ஏற்கெனவே ஒரு முறை கொள்ளை நடந்துள்ளதால், கடையில் வசூலாகும் பணத்தை பத்திரப்படுத்த லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முயற்சித்து முடியாததால், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் வசூலான மூன்றரை லட்சம் ரூபாய் தப்பியது. மேலும் கடையில் வைத்திருந்த மதுபாட்டில்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, கடையின் சிசிடிவியின் டிவிஆர் பதிவுகளின் அடிப்படையில் பெரம்பூர் காவல் துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %