மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 15 நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 21 லட்சம் 12 ஆயிரத்து 500 மற்றும் ஓய்வூதிய தொகை ரூ.60 ஆயிரத்து 60 வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.
முன்னதாக வன்கொடுமை தொடர்பான விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிப்புக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணு, கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், சுரேஷ்குமார், வினோத், மாயகிருஷ்ணன், தனுஷ்கோடி, ராமதாஸ், கார்த்திகேயன், வெங்கட்ராமன், நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.