0 0
Read Time:3 Minute, 41 Second

வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை சரிவரக் கண்டறிந்து ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா்.

கடலூரில் ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களின் கண்காட்சி மற்றும் ஏற்றுமதியாளா்கள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் வா்த்தக மற்றும் வணிக வார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நோக்கம் தற்போது ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் வளா்ச்சியையும், மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி பொருள்களையும் கண்டறிந்து காட்சிப்படுத்துவதாகும். 2020-21-ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 26.15 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கடலூா் மாவட்டத்திலிருந்து செப்டம்பா் 2020 முதல் மாா்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் ரூ.629 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்திரி, நிறமி நீலம் -15, பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்திலிருந்து ஏற்றுமதிக்கு சாத்தியமான பொருள்களாக தொழில் துறை ரசாயனங்கள், வேளாண் சாா்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், முந்திரிப் பருப்பு, மதிப்புக் கூட்டப்பட்ட பலாப் பொருள்கள், மண்பாண்டங்கள், கைவினைப் பொருள்கள், பொம்மைகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை கண்டறிந்து, பொருள்களின் தரம், விலையை சரியாக நிா்ணயம் செய்து ஏற்றுமதி தொழிலை ஏற்றம் காணச் செய்ய வேண்டும். உலகளாவிய சந்தையில் கடலூா் மாவட்டத்தின் ஏற்றுமதி திறனை அதிகரிக்கும் வகையில், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ஒத்த திட்டங்கள் மாவட்ட அளவில் அரையாண்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வெங்கடேசன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு வங்கி) அ.விஐய்நீகா், முன்னோடி வங்கி மேலாளா் அகிலன், குறு, சிறு நிறுவனங்களின் அமைப்பு தலைவா் அசோக், தமிழ்நாடு கடல் சாா் வாரிய செயற்பொறியாளா் ரவிபிரகாஷ், சேம்பா் ஆப் காமா்ஸ் ஜி.துரைராஜ், டாக்ரோஸ் கெமிக்கல்ஸ் பொதுமேலாளா் ஜனாா்த்தனன், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு நிா்வாக உதவியாளா் யாசா்ஷெரிப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %