0 0
Read Time:3 Minute, 7 Second

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் #IPL201 #CSKvKKR

வெங்கடேஷ் அய்யர், அந்த்ரே ரஸல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் ரன்உயர்வுக்கு ஷர்துல் தாகூர் தடைபோட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா அணியின் ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் முதல் ஓவரில் இரண்டு பவுண்ரிகள் விளாசினார். என்றாலும், கடைசி பந்தில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி சிறப்பாக விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் மோர்கன் 8 ரன்னில் வெளியேறினார். அரைசதம் நோக்கிச் சென்ற ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். ரஸல் ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா 16.4 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்தது.

தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %