0 0
Read Time:2 Minute, 20 Second

2021-2022-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற நிலையில், கடலூர் பெரியார் அரசு கல்லூரி உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடியும் நிலையில் உள்ளது. ஆனால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த கல்வி ஆண்டில் அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையை அமல்படுத்தி, கூடுதலாக மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு குளோப், மக்கள் அதிகாரம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வேலுச்சாமி, குடியிருப்போர் நலச்சங்கம் மருதவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாவாணன், ஸ்ரீதர், செந்தில், ம.தி.மு.க. நகர செயலாளர் அய்யப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு சுந்தர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %