0
0
Read Time:1 Minute, 8 Second
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியில் கஜமுக விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை நடந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக கடந்த நபர் மீது சந்தேகம் அடைந்து, வாகன பதிவெண்ணை கொண்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் சிதம்பரத்தை சேர்ந்த பாலாஜி என்பதை அறிந்து அவரிடம் விசாரித்ததில், பகலில் நெய்வேலியில் உள்ள கோயிலில் அர்ச்சகராக இருந்ததாகவும், இரவு நேரங்களில் தலையில் தொப்பி அணிந்து கொள்ளையடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.