சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பணியாற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. சிதம்பரத்தில் பணிபுரியும் நடமாடும் தடுப்பூசி குழுவினா் 12 பேருக்கும், நகர ஆரம்ப சுகாதார மையம், வடக்குவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி மையங்களில் பணியாற்றும் 22 பேருக்கும், ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளி மையத்தில் பணியாற்றும் 22 பேருக்கும் கிருமிநாசினி, துண்டு, முகக் கவசங்கள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கச் செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல் கோத்தாரி, மேலாண்மை குழு உறுப்பினா் இளங்கோவன், தீபக்குமாா் ஜெயின், சிவராம வீரப்பன், சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் ராஜசேகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சீனுவாசன், தன்னாா்வலா் சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.