மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு செயலாளர் மற்றும் தனி அதிகாரி விற்பனை கூடங்களை பயன் படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்ச விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 8,123 -க்கும் சராசரி 6,540-க்கும் விலை போனது. மொத்தம் 374 விவசாயிகள், 12 வியபாரிகள் 478 குவியல்கள் 950 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும் நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் மற்றும் தனி அலுவலர் ரவிசந்திரன் கூறுகையில் இது போல் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களான நெல், பயறு, உளுந்து, நிலகடலை, முந்திரி, துவரை, தேங்காய், மிளகாய், கரும்பு வெல்லம் போன்ற விளை பொருட்கட்களை எடுத்து வந்து பயன் அடைய வேண்டியும், மேலும் விளை பொருட்களை நாகை விற்பனை குழு கீழ் இயங்கும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார் கோவில், சீர்காழி, வேதார்ண்யம், கீழ்வேளூர், திருபூண்டி, மற்றும் நாகப்பட்டினம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று அதிக விலை கிடைக்கும் நேரங்களில் விற்று பயன் அடைய வேண்டி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.