0 0
Read Time:2 Minute, 0 Second

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி ரேணுகாதேவி மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் வங்கக்கடல் கரையோர மீனவ கிராமங்களான தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, சின்னுபேட்டை, குட்டியாண்டியூர், தாழம்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.

மீனவர்களின் நலவாரிய அட்டைகள், வாக்கி டாக்கி, படகுகளுக்கான உரிமம் கட்டணம் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பஞ்சாயத்தார்கள் முன் வைத்தனர். மீனவ பஞ்சாயத்துக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குனர் சண்முகம் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் மீனவர் நலத்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கடலோரம் அமலாக்க துறை செல்வி வெர்ஜீனியா, சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், மீன்வளத்துறை சார் அலுவலர் சதுருதீன் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் பலர் உடனிருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %