0 0
Read Time:2 Minute, 45 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் தனது தனது கணவர் முகமது அலி உயிரிழந்த பின்னர் தனது மகள் மற்றும் மூன்று மகன்களின் வீடுகளில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக தனது மூன்று மகன்களும் என்னை வீட்டை சேர்ந்து கொள்ளாமல் தாவூத்பீவி பெயரில் உள்ள வீட்டை பூட்டி அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

கருணை கொலை செய்ய கோரி மயிலாடுதுறை ஆட்சியரிடம் 90 வயது மூதாட்டி மனு

 இதனால் செய்வதறியாது தவித்த தாய் தாவூத்பீவி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை அனுகி தனது சொத்துக்களை தனது மகன்கள் பிடுங்கிக்கொண்டு தன்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகவும், தனக்குச் சொந்தமான வீட்டினை மீட்டுத்தந்தால், அதனை விற்று அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி அதில் வரும் வட்டியில் தனது  இறுதி காலத்தை கழித்துக் கொள்வதாகவும், இல்லையெனில் தன்னை கருணை கொலை செய்து விடுமாறு கண்ணீர் மல்க மனு அளித்தனர். மனு பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தர உத்தரவிட்டார். 

கருணை கொலை செய்ய கோரி மயிலாடுதுறை ஆட்சியரிடம் 90 வயது மூதாட்டி மனு

இதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி , மூதாட்டியின் மகன்களை விசாரணைக்கு வர உத்தரவிட்டு அதுவரை இளையமகன் வீட்டில் தாய் தாவூத்பீவி  பாதுகாப்பாக இருப்பதற்கு பேசி நடவடிக்கை எடுத்தார். மேலும் இதுதொடர்பாக ஓரிருநாள்களில் விசாரணை நடத்தி மூதாட்டிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிள்ளைகளால் கைவிடப்பட்ட 90 வயதுடைய தாய் தன்னை கருணை கொலை செய்துவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் அங்கு இருந்தவர்களை வருத்தம் அடைய செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %