ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேர்மையான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார். அவர் பேசியது பின்வருமாறு:
”முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்திற்கு மாறாக நடைபெற்று வருகிறது.இது ஜனநாயக நாடு, மன்னர் ஆட்சி இல்லை என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்றம் செல்லும் நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி விடக் கூடாது. ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்தால் அதிமுக மகத்தான் வெற்றி பெறும். கனிமொழி, உதயநிதி ஆகியோர் பிரச்சாரம் செய்ய போக வில்லை. பிரச்சாரத்திற்கு சென்றிருந்தால் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆச்சு என மக்கள் கேள்வி எழுப்பி இருப்பார்கள். ஊராக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற குறுக்கு வழியில் ஜனநாயக விரோத போக்கில் திமுகவினர் ஈடுப்பட்டுள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.