1 0
Read Time:3 Minute, 9 Second

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (06413) இன்று முதல் தொடங்கியது. இந்த ரயில் மயிலாடுதுறையில் காலை 6.30க்கு புறப்பட்டு காலை 9.45க்கு திருச்சி சென்றடையும். அதேபோல், மீண்டும் மாலை 6.15க்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். கொரோனா காரணமாக அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மட்டும் மீண்டும் துவக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் ரயில்வே அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு 12 பெட்டிகளுடன் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது. காலை 5.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பாசஞ்சர் ரயிலாக ஓடிக்கொண்டிருந்தபோது ரூ.45க்கு வழங்கப்பட்ட சேவை, சிறப்பு எக்ஸ்பிரஸாக மாற்றப்பட்ட பிறகு ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு  அதிருப்தி தெரிவித்துள்ள ரயில் பயனாளர்கள் மீண்டும் இந்த ரயிலை பாசஞ்சர் ரயிலாக மாற்றி, கட்டணத்தைக் குறைப்பதுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு திருச்சிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு வரவேற்புத் தெரிவித்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திமுக, வர்த்தக சங்கம் மற்றும் சேவைச் சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

source: news18

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %