மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் 30-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலில் ஊராட்சி கிராம மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்தனர்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளடக்கிய 30 -வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினராக இருந்த சுந்தர் காலமானார். அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் அதிமுக சார்பில் சபரிநாதன், திமுக சார்பில் செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் இளையநகுலன் உள்பட 5 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 2517 பேரும், பெண் வாக்காளர்கள் 2591 பேர் உள்ளனர். மொத்தம் 9 வாக்குச் சாவடி மையங்களில் மக்கள் அமைதியாக தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
சந்திரபாடி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் இரா. நந்தகோபால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா ஆகியோர் பார்வையிட்டனர்.
இதேபோல் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தங்குடி, கழனிவாசல், பொரும்பூர் உள்ளடக்கிய 15 -வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4471 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் திமுக சார்பில் ரமேஷ் (எ) ராக்கெட், அதிமுக சார்பில் மணிகண்டன் உள்ளிட்ட 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை முதல் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கிருமி நாசினி வழங்கி, முககவசம் அணிந்து, வாக்களிக்களித்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் கையுறைகள் வழங்கப்பட்ட்து. வாக்காளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.