சிஎஸ்கே நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக ஆடி வென்றது. டெல்லிக்கு எதிராக ப்ளே ஆப் சுற்றில் வென்றதன் மூலம் சிஎஸ்கே பைனல்ஸ் சென்றுள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் 2021 தொடரில் 9வது முறையாக சிஎஸ்கே பைனல்ஸ் செல்கிறது. நேற்று முதலில் ஆடிய டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன் பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே டு பிளசிஸ் விக்கெட்டை இழந்தது.
அதன்பின் அதிரடி காட்டிய ருத்துராஜ், உத்தப்பா இருவரும் அரைசதம் அடித்தனர். கடைசியில் இறங்கிய தோனி வெறும் 6 பந்தில் 18 ரன்கள் அடித்து 300 ஸ்டிரைக் ரேட்டில் சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
பேட்டிங் பார்ம் பேட்டிங் பார்ம் இல்லாமல் தோனி கஷ்டப்பட்டு வந்த நிலையில் நேற்றைய ஆட்டம் மூலம் தோனி மீண்டும் பார்மிற்கு திரும்பினார். தோனி ஏன் ஜடேஜாவை அனுப்பி இருக்க கூடாது, ஏன் பிராவோவை அனுப்பி இருக்க கூடாது என்று பலர் கேட்ட நிலையில், தோனி தன் மீது நம்பிக்கை வைத்து நேற்று களத்திற்கு வந்தார். தன் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்து களத்திற்கு வந்தார்.
அதிரடி அதன்படியே இரண்டாவது பந்தில் சிக்ஸர்.. அதன்பின் ஹார்ட் டிக் பவுண்டரி என்று அடித்து வெளுத்து வெறும் 6 பந்தில் ஆட்டத்தை முடித்தார். பல நாட்களாக தோனியின் இப்படி ஒரு ஆட்டத்திற்காக காத்து இருந்த மக்கள், ரசிகர்கள் எல்லோரும் தோனியின் நேற்றைய ஆட்டத்தை பார்த்து அசந்து போனார்கள். பல ரசிகர்கள் களத்திலேயே தோனியின் ஆட்டத்தை பார்த்து கண்ணீர்விட்டனர்.
சிறப்பு தோனி கடந்த சீசனில் பேட்டிங் பார்ம் இன்றி மோசமாக கஷ்டப்பட்டார். கடந்த சீசன் முழுக்க சரியாக ஆடவில்லை. இந்த சீசனிலும் பேட்டிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறினார். ஸ்பின் பவுலிங்கில் அவுட்டான காரணத்தால் தோனியால் பேட்டிங் செய்து நிரூபிக்க முடியவில்லை. முக்கியமாக பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் தோனி தொடர்ந்து திணறி வந்தார்.
பயிற்சி இந்த நிலையில்தான் நேற்று சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக தோனி நெட் பயிற்சியின் போது அதிரடியாக ஆடினார். அதாவது நெட் பயிற்சியில் சிக்ஸர், பவுண்டரி அடித்து அதிகம் பயிற்சி மேற்கொண்டார். பந்தை பார்த்து, சரியாக கனெக்ட் செய்து சிக்ஸ், பவுண்டரி அடிக்க முயன்று இருக்கிறார். போட்டிக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு வரை கூட தோனி தீவிரமாக பயிற்சி செய்து இருக்கிறார்.
பிராவோ முக்கியமாக தோனி பெரும்பாலும் டெத் ஓவர்களில் ஆட வாய்ப்புள்ளதால் பிராவோ ஓவரில் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். பிராவோவின் ஸ்லோ பால், வைட் பந்துகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதில் தோனி ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்து இருக்கிறார். பயிற்சியின் போது பிராவோ வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்துள்ளார். இது தோனியின் பார்மில் பெரிய ஊக்கத்தை கொடுத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டிங் இந்த தரமான பேட்டிங் பயிற்சிதான் தோனி தனது நம்பிக்கையை மீட்டு கொண்டு வர காரணமாக இருந்தது. அதேபோல் நேற்று டெத் ஓவர்களில் ஸ்லோ பால், வைட் பால்களில் தோனி சிக்ஸ் அடிக்கவும் இதுவே காரணமாக இருந்தது என்கிறார்கள். இதைத்தான் தோனியும் நேற்று தனது பேட்டியில் உறுதி செய்தார். என்னுடைய ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. பவுண்டரி லைன் தூரமாக இருந்தது. இதை டெல்லி அணி சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
சாதகம் நான் பந்தை பார்த்து சரியாக அடிப்பதில் கவனம் செலுத்தினேன். வேறு எதுவும் இல்லை. இந்த சீசனில் நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதனால் அதை என் தலையில் இருந்து எடுத்துவிட்டு ஆட்டம் மீது கவனம் செலுத்தினேன். வலை பயிற்சியில் கவனம் செலுத்தினேன். அதில் பந்தை பார்த்து அடிக்க தீவிரமாக முயற்சி செய்தேன்.
வலை பயிற்சி பவுலர் என்னென்ன வேரியேஷனில் பவுலிங் செய்வார் என்பதை கணித்து பயிற்சி மேற்கொண்டேன். அதை தவிர என்னுடைய கவனத்தில் எதுவும் இல்லை. நிறைய விஷயங்களை நினைத்தால் பந்தை கவனிக்க முடியாது, என்று தனது வலைப்பயிற்சி குறித்தும், மனநிலை குறித்தும் தோனி விளக்கி உள்ளார். இந்த வலை பயிற்சிதான் அவர் பார்ம் திரும்பவும் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.