0 0
Read Time:2 Minute, 6 Second

‛‛நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை நாளை (அக்.,12) காலை முதல் உடனுக்குடன் வெளியிட வேண்டும்,” -தேர்தல் ஆணையம் உத்தரவு!.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நாளை (அக்.,12) காலை வெளியாக உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் தெரிவித்தாவது: ஓட்டு எண்ணும் மையத்துக்கு வருவோர் உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் அனுமதிக்க வேண்டும், பிறரை அனுமதிக்கக்கூடாது. ஓட்டு எண்ணும் மையத்துக்கு அலுவலர்கள் காலை 6.30 மணிக்குள் வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சி.சி.டி.வி., கேமரா மற்றும் போதிய மேஜைகள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். அதோடு முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் இதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %