0 0
Read Time:1 Minute, 45 Second

தினமும் ஒரு ரூபாயிலிருந்து 100ரூபாய் அல்லது ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசி சேகரித்து மாதந்தோறும் அல்லாஹ்விற்காக ஏழை எளிய மக்களை கண்டறிந்து மதிய உணவு, அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், திருமண உதவி மற்றும் மருத்துவ உதவி இறைவனுக்காக கொடுப்போம் என்ற வகையில், ஒரு ரூபாய் ஸதகா குழு கடந்த ஐந்து ஆறு மாதங்களாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ்,

  • ஏழை பெண்ணுக்கு திருமண உதவி
  • மருத்துவ உதவி
  • மயிலாடுதுறை முழுவதும் பேருந்து / ரயில் நிலையம், அரசு மருத்துவமணை மற்றும் சாலையோர 100 ஏழைகளுக்கு மதிய உணவு

என பல திட்டங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றனர். மேலும் மயிலாடுதுறை நீடூர், கங்கணம்புத்தூர்,பாவாநகரில் அனைத்து சமுதாய 10 ஏழை எளிய குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை நேற்று வழங்கினர்.

மயிலாடுதுறை நீடூர் / தஞ்சாவூர் அய்யம்பேட்டையை தொடர்ந்து புதிதாக திருவாரூர் மற்றும் கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் நம் ஒரு ரூபாய் ஸதக்கா திட்டம் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

செய்தி: முஹம்மது ரியாஜுதீன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %