0 0
Read Time:2 Minute, 42 Second

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள குமராட்சி ஒன்றியம் 19-வது வார்டு, பண்ருட்டி ஒன்றியம் 2-து வார்டு, மேல்புவனகிரி ஒன்றியம் 11-வது வார்டு, விருத்தாசலம் ஒன்றியம் 7-வது வார்டு, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் 10-வது வார்டு என 5 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 ஊராட்சி மன்ற தலைவர்கள், 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது.நேற்று அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அதன்படி குமராட்சி ஒன்றியம் 19-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சங்கர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஓட்டுகள் விவரம்
சங்கர் (தி.மு.க.) – 2041
சுந்தரமூர்த்தி (அ.தி.மு.க.)- 1860
பன்னீர்செல்வம் (தே.மு.தி.க.)- 5
பண்ருட்டி ஒன்றியம் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயப்பிரியா
வெற்றி பெற்றார்.
ஜெயப்பிரியா (தி.மு.க.)- 2404
ஆதிலட்சுமி (அ.தி.மு.க.)- 1481
ராதிகா (தே.மு.தி.க.) – 107
மேல்புவனகிரி ஒன்றியம் 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.
கார்த்திகேயன் (தி.மு.க.)- 2228
ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)- 1051
சஞ்சீவி (பா.ஜ.க.)- 61
காசிராஜன் (தே.மு.தி.க.)- 2
விருத்தாசலம்
விருத்தாசலம் ஒன்றியம் 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாந்தி வெற்றி பெற்றார்.
சாந்தி (தி.மு.க.)- 2325
தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.)-1842
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் 10-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எழிலரசன் வெற்றி பெற்றார்.
எழிலரசன் (தி.மு.க.)- 2087அமலா
(அ.தி.மு.க.)- 1474
ரவி (பா.ஜ.க.)- 12

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %