முந்திரித் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் கோவிந்தராஜை அடித்து, விஷம் ஊற்றிக் கொன்றதாக ஆலை உரிமையாளரும் கடலூர் எம்பியுமான ரமேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
5 பேரைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில், திங்களன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். பின் வழக்கினை விசாரித்த நீதிபதி எம்பி ரமேஷ் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பின் இன்று சிறைச்சாலையில் இருந்து கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் எம்பி ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டார், இந்நிலையில் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை அனுமதி கோரி இருந்தனர், இந்நிலையில் எம்பி ரமேஷ் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்ததால், நீதிபதி பிரபாகரன் சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.